Home பிரதான செய்திகள்பங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

பங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

by admin

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேசுக்கெதிரான 3-வது இருபதுக்கு 20 போட்டியில் 50 ஓட்ட வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரினையும் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவரில் 190 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 191 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 17 ஓவரில் 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இற்தநிலையில் 50 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More