கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வருட இறுதி பார்டியில், வெளியில் அதாவது பிரதேச செயலகத்தில் நான்கரை அடி வெள்ளம் வரும் வரை வெளியில் என்ன நடகின்றது எனத் தெரியாது பார்டியில் மூழ்கிப் பொய் இருந்தவர்களை வெள்ளத்தில் மூழ்காது காப்பாற்றியது இராணுவமும் நாங்களுமே என கண்டாவளை கிராம மக்கள் தெரிவின்றனர்
கடந்த 23 இரவு பதினொன்று அரை மணியளவில் கண்டாவளைப் பாடசாலையில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமிற்கு சேவையாற்ற சென்ற பிரதேச செயலகர் அடங்கிய குழுவினரை கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து பிரதேச செயலரினால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அங்கு என்ன நடைபெற்றது என மக்களை வினவும் போது,
“இரணைமடு நீர் எங்கள் வீடுக்குள் வரும் வரை கண்டாவளை பிரதேச செயலகம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. எமக்கு அறிவித்தல் வழங்கி முன்னின்று வெள்ளத்தில் அகப்பட்டவர்களை உழவு இயந்திரங்கள் முலம் மீட்டது எமது கண்டாவளை கமக்கார அமைப்பும் எமது இளைஞர்களும். வெள்ளம் வந்து நாங்கள் இந்த பாடசாலைக்கு வந்து 48 மணித்தியாலங்களுக்கு பின்னர் தான் பிரதேச செலயகம் இங்கு வந்தது மக்கள் வெள்ளத்தில் சாக கிடக்கும் போது வருட இறுதி பாட்டி கொண்டாடியவர்கள் தான் அவர்கள்
வெள்ளத்தில் எமது சொத்துக்களை இழந்தும் நனைத்தும் சாப்பாடு இல்லாமல் இருந்த எங்களுக்கு பிரதேச செயலரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவரான அதாவது பிரதேச சபை உறுப்பினர் எண்டு சொல்லப்பட்ட அசோக்குமார் தான் எமக்கு பாணும் வாங்கி பருப்புக் கறியும் வைச்சு தந்தவர்
இரண்டு நாளாக ஒன்றுமே இல்லாது இருந்த எங்களுக்கு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்களையும் எமது பாடசாலை பழைய மாணவர்களையும் அசோக்குமார் தான் தொடர்பு கொண்டு அவர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளையும் வழங்கினார் அவ்வாறே அன்றும் அதாவது 21.12.2018 மாலையும் எமக்கு எமது உறவுகள் ஒரு தொகுதி பொருட்களை வழங்கி இருந்தார்கள் அதனை கமக்கார அமைப்பு கிராம சேவையாளர் ,அபிவிருத்தி உத்தியோகத்தரின் அனுமதியுடன் பாடசாலையில் வைத்திருந்தனர். பாடசாலையில் முந்நூறு குடும்பங்கள் இருக்கிறார்கள் வந்த பொதி அனைவருக்கும் வழங்குவதற்கு போதாமையால் மறுநாள் சில பொருட்கள் வரவும் இருந்தது. அவையும் வந்ததும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என்று அனைத்து மக்களும், கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அனைவரதும் இணக்கத்துடனேயே அங்கு பொருட்கள் வைக்கப்பட்டது.
நள்ளிரவு பன்னிரண்டு மணியை அண்மித்த நேரத்தில் வருகைதந்த பிரதேச செயலர் அடங்கிய குழுவினர் ஓர் ஊடகவியலாளரையும் அழைத்து வந்து அவை பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் நாளையதினம் அமைச்சர் வருகின்றார் எனக் கூறியவாறு பெறுமதியான பொருட்களை அருகில் இருந்தவர்களுக்கு வழங்கினார் எமது உறவுகளால் வழங்கப்பட்ட பொருட்களை தனது பணத்தில் வழங்குவது போல் வழங்கி புகைப்படமும் எடுத்துச் சென்றார்.
அப்போது வெளிசென்று விட்டு உள்ளே வந்த கமக்கார அமைப்பினர் நீங்கள் அந்தப் பொருட்களை வழங்கியிருகின்றீர்கள் அவற்றை முழுவதையும் வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டனர் காரணம் மீதியாக இருந்த சில பொருட்களை மட்டும் வைத்து நாம் ஒன்று செய்ய முடியாது ஒழுங்காக வழங்கவில்லை என்று வெளி நாட்டில் உள்ள எமது உறவுகள் சண்டை பிடிப்பார்கள் பொருட்கள் கிடைக்காத மக்கள் கமக்கார அமைப்புடன் தான் முரன்படுவார்கள் மீதமாக உள்ள சில பொருட்களையும் வழங்கிவிட்டு செல்லுங்கள் குறைபாடுகளையும் நீங்கள் பொறுப்பெடுங்கள் என்று தான் சொல்லப்பட்டது
அவர்களை மறிக்கவும் இல்லை இடையூறு வழங்கவும் இல்லை பிரதேச செயலர்தான் எங்களது உறவுகளின் பொருட்களை வழங்கி தனது பொருட்கள் போல் படம் எடுத்து சென்றவர் பிரதேச செயலர்தான் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார் அசோக் எங்களைப் பொறுத்தவரை பிரதேச சபை உறுப்பினர் எங்களுக்கு அவர் எமது கமக்கார அமைப்பு தலைவர் நீதித் துறை இதனை எங்களிடம் வந்து நேரடியாக ஆராய்ந்து குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்