பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறியும் முகமாக இன்று (28) கிளிநொச்சி செல்கின்றார்
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பிரதமர் நிலைமையை நேரில் கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பிற்பகல் 1.00 மணியளவில் செல்லும் பிரதமர், அங்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம் பெறும் விசேட மாநாட்டிலும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்டங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.