உத்தரப் பிரதேசம் காஜிப்பூரில் நேற்று இடம்பெற்ற இந்திய பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்குச் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதனையடுத்து ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரிய நிசாத் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் கூட்டம் முடிந்து வந்தவர்கள் வந்த வாகனம் மீது பல்வேறு இடங்களில் மறித்து, கல்வீசி தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது ஒரு பகுதியில் இடம்பெற்ற ; நிசாத் கட்சியினர் மறியலில் ஈடுபட்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதனையடுத்து அங்கு போக்குவரத்தினை சீர் செய்ய சென்ற காவல்துறை உத்தியோகத்தர் மீது போராட்டக்கார்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில்இந்த கல்வீச்சு தொடர்பாக இதுவரை ராஷ்ட்ரிய நிசாத் கட்சியைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
எனினும் தமது கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்த பாஜக முயல்கிறது எனவும் தமது கட்சி வன்முறையில் ஈடுபடும் கட்சி இல்லை எனவும் நிசாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிசாத் தெரிவித்துள்ளார்.