குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக இன்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது
இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் இன்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
இதன்போது பெருமளவான காவல்துறையினர்; கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவம் காவல்துறையினர்; புலனாய்வாளர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்து வீடியோ பதிவு செய்து மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்