150
இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை முதலிய விடயங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாது என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெறுள்ளது. இதன் போது இந்த விடயம் தொடர்பில் உரையாடப்பட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இலங்கையின் அரசியல் யாப்பில், அரசியலமைப்பில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய, 9 ஆவது பிரிவில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு தொடர்பான பிரிவில், இலங்கை அரசு – ஒரு ஒற்றையாட்சி அரசு என்று, சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் குறிப்பிடுவது என்றும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
1 comment
சிங்களவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற படியால் புத்தர் பிறப்பதற்கு முன்பு தோன்றி இன்று வரை உள்ள தமிழர்களின் சிவ பூமியாகிய இலங்கையை புத்த சிங்கள நாடு என்று கூறி புத்த மதத்திற்கு முதல் உரிமை கொடுப்பது தமிழர்களினால் ஏற்க முடியாது. அனுமதிக்கக் கூடாது. அமைதியான போராட்டங்களை உலகளாவியரீதியில் தீவிரப்படுத்த வேண்டும்.
இப்பொழுது இலங்கை ஒரு பல கலாச்சார நாடு. இதை உணர்ந்து எல்லோருடைய உரிமைகளும் மதிக்கப்படும் சரியான மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.