Home இலங்கைலக்சபான நீர்வீழ்ச்சியில் விழுந்து பிரித்தானிய இளைஞர் உயிரிழப்பு

லக்சபான நீர்வீழ்ச்சியில் விழுந்து பிரித்தானிய இளைஞர் உயிரிழப்பு

by admin


லக்சபான நீர்வீழ்ச்சியின் பாதுகாப்பற்ற பகுதியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புதுவருடத்தினமான நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது நண்பர்களுடன் நோட்டன் பிரிட்ஜ் தெபடன் சமனெலிய தோட்ட பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணித்தவரின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோட்டன் பிரிட்ஜ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More