264
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என அக் கட்சியின் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
படுகொலைகள் கடத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ படுகொலைக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் அனைத்தும் எமது கட்சியின் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
அதில் பல கொலைகள் தொடர்பான விசாராணைகளில் எமது கட்சிக்கும் எந்த கொலைகளுக்கு தொடர்பில்லை என தெரியவந்து உள்ளது. எனவே படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்த விசாரணைகள் 1983ஆம் ஆண்டு தொடக்கம் விசாரிக்க பட வேண்டும். அதன் போது இலங்கை வந்த இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து இயங்கியவர்கள் , அவர்கள் செய்த படுகொலைகள் கடத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டால் , அந்த விசாரணைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சகல ஒத்துழைப்பையும் வழங்கும் என தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் விசாரணை வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தென்னிலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் கொல்லபப்ட்ட ஊடகவியலாளர்கள் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு , மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். என தெரிவித்தார்.
Spread the love