Home இலங்கைபருத்தித்துறையில் சட்டத்தரணிக்கும் காவற்துறைக்கும் இடையில் வாக்குவாதம்..

பருத்தித்துறையில் சட்டத்தரணிக்கும் காவற்துறைக்கும் இடையில் வாக்குவாதம்..

by admin

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் போது , குறித்த சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்ய முயன்ற போது சட்டத்தரணிக்கும் காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமையால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் காவற்துறையினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தான் பயணித்த வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் சரணடைய வைக்கும் நோக்குடனேயே சட்டத்தரணி அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிலையில் அதனை அறிந்த பருத்தித்துறை காவற்துறையினர், காவற்துறைப் புலனாய்வாளர்கள் சட்டத்தரணி அழைத்து வந்த சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கைது செய்ய முயன்றுள்ளனர். அதனால் சட்டத்தரணிக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More