153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச நாணய நிதியத் தலைவி Christine Lagarde மீது பிரான்ஸில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சராக செயற்பட்ட காலத்தில் கவனயீனமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட போதிலும் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
வர்த்தகர் ஒருவருக்கு 404 மில்லியன் யூரோ வழங்குவதற்கு அனுமதியளித்ததாதகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை என Christine Lagarde தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விடயம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கூடிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
Spread the love