குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளியவளை வடக்கு கிராமம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம அலுவலரது நடவடிக்கை காரணமாக வெள்ள நிவாரணம் எதுவுமின்றி தாம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சாந்தி சிறிஸ்கந்தராஜாவை அக்கிராமமக்கள் நேற்று (5) மாலை தமது கிராமத்துக்கு அழைத்து முறையிட்டுள்ளனர். இதன்போது மக்கள் தமது பகுதிக்குள்ளும் வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதாகவும் கிராம அலுவலர் தமது வீடுகளை பார்வையிட்டு வெள்ள பாதிப்புக்களுக்கு நிவாரணங்களை பெற்று தரவில்லை எனவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்;கான தீர்வினை பெற்றுதருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மாவட்ட அரசாங்க அதிபரிடம் விடயத்தை தெரியப்படுத்தி குறித்த மக்களுக்கு உடனடியாக தீர்வு பெற்றுதருமாறு பணித்துள்ளதோடு அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுதருவேன் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்