தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டுள்ளது. சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை பொதுப்பணித்துறையினரும், காவல்துறையினரும்; அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை நினைவிடத்தில் வைத்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு சென்று பார்வையிட்ட பொதுப் பணித்துறையினரும், காவல்துறையினரும் சிலை வைக்க அரசிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.