பொது இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சிகளால் குப்பைகள் தவறாக கையாளப் படுவதாகவும் குப்பைக் கூடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குப்பைகளைச் சேகரிப்பது, இடம் மாற்றுவது, அவற்றுக்கு தீர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வது ‘திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ன் கீழ் அனைத்து அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமையாகும். ஹோட்டல்கள், இறைச்சிக் கூடங் கள், காய்கறி சந்தைகள் என குப்பைகள் அதிகம் உருவாகும் இடங்களில் அவற்றை விதிகளின் படி தரம்பிரித்து வழங்க மாநக ராட்சிகள் உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குப்பைகள் உற்பத்தியாகும் இடங்களிலேயே தரம் பிரிக்கப்பட வேண்டும். குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் மக்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சொத்து வரியில் சலுகை வழங்கலாம் எனவும் அவ்வாறு வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் எனவும் இது தொடர்பான திட்டத்தை ஒவ்வொரு மாநகராட்சி ஆணையர்களும் 1 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தர வில் கூறப்பட்டுள்ளது.