குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடளிப்பும் மரக்கடத்தலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியாக காவல்துறையினரும் வன அதிகாரிகளும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் மரக்கடத்தல் காடழிப்பு என்பன குறைவதாக இல்லை. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரிகள் இன்றும் 13 முதிரை மர குறியுடன் கண்டர் வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் இவ்வாறு மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வனஅதிகாரி ஆர் ஏசி டி ரணசிங்க அவர்களது ஆலோசனைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரிகளான சந்திரசிறி முருகதாச ஜெயசிங்க தேவதீபன் ஆகியோர் கொண்ட குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
நேற்று மாலை 2 மணிமுதல் வனத்தில் தங்கியிருந்து சுற்றவர உமி மூடைகளை அடுக்கி நடுவில் மர குறிகளை இட்டு கடத்தும் இந்த சூட்சுமமான கடத்தலை முறியடித்துள்ளனர்
குறித்த வாகன சாரதி தப்பியோடிய நிலையில் கைப்பற்றப்பட்ட கண்டர் வாகனத்தையும் 13 முதிரை மர குற்றிகளையும் இன்று (08.01.2019) நீதிமன்றில் முற்ப்படுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்