குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது.
நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளனா் என யாழ் பல்கலைகழக துணைவேந்தா் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
மேலும் யாழ் பல்கலைகழகத்தின் பத்தாவது பீடமாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் இலங்ககையில் உள்ள பல்கலைகழகங்களில் எமது பல்கலைகழகம் மூன்றாவது நிலையில் தொழிநுட்ப பீடத்தையும் ஆரம்பித்துள்ளது எனவும் இங்கு அனுமதி பெற்றுள்ள மாணவா்களுக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதுடன் முதலாம் வருட மாணவா்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபா செலவில் 400 ஏக்கா் கட்டடம் அமைக்கும் பணிகள் அரம்பிக்கப்படவுள்ளன எனவும’ அதன் பணிகள் நிறைவுற்றதும் பெரும்பாலும் இரண்டாம் வருட கற்கைகளை மாணவா்க்ள அங்கு தொடரக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இங்கு ஆண்,பெண்களுக்குரிய இரண்டு விடுதிகள் காணப்படுகின்றன. மேலும் இரண்டு விடுதிகள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
தொழிநுட்ப பீடத்திற்குரிய வசதி வாய்ப்புக்களை பொறுத்தவரை கடந்த வருடம் 13 மில்லியனுக்குரிய உபகரணங்களை வாங்கியிருக்கின்றோம். இந்த வருடம் சுமாா் 120 மில்லியனுக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருக்கின்றோம். எங்களுக்கு பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவும், உயா் கல்வி அமைச்சும் மிகவும் உறுதுணையாக இருந்து நிதி வசதிகளை ஏற்படுத்தி தருகின்றார்கள். முக்கியமாக கிளிநொச்சி வளாகத்தில் பதினொறாவது பீடமாக விவசாய பீடத்துடன் இணைந்து விளையாட்டு விஞ்ஞான பீடத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் தொழிநுட்ப பீடத்தின் பிடாதிபதி எஸ். சற்குனராஜா,தொழிநுட்ப பீடங்களுக்கான தேசிய இணைப்பாளா் கலாநிதி ரிஏ. பியசிறி.பேராசிரியா் கே. கந்தசாமி, பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜா,விவசாய பீட பீடாதிபதி திருமதி ரி. மிகுந்தன் பதில் பதிவாளா் இராஜவிசாகன் மற்றும் விரிவுரையாளா், மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்