வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது.
பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்குள் நான்காவது முறையாக வடகொரிய ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வட கொரியாவுடனான ராஜதந்திர உறவில் முக்கிய பங்காளியாக விளங்கும் சீனா வட கொரியாவுடன் வர்த்தக உறவிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது