Home இந்தியாஅசாமில் 3 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்…..

அசாமில் 3 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்…..

by admin


மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்.

அசாமில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி இடம்பெற்றுவருகின்ற நிலையில் மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதிருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியதனைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் தமது பதவிவிலகலுக்கான கடிதத்தை முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More