குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சிகளை வழங்க உள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அனுமதியுடன் தறிக்கப்படும் பனைகள் , இயற்கை அனர்த்தங்களால் விழும் பனைகள் உள்ளிட்டவற்றின் அடிப்பகுதி குற்றிகள் விறகு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான பயிற்சிகளை வழங்கப்படவுள்ளது.
சாவகச்சேரி சரசாலையில் உள்ள பயிற்சி நிலையத்தில் கிழமை நாட்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மூன்று மாத கால பகுதியை கொண்ட இந்த பயிற்சியில் இணைவோருக்கு பயிற்சி நேர கொடுப்பனவாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடிவின் பின்னர் அவர்களுக்கான சுயதொழிலை மேற்கொள்ள உதவிகள் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. குறித்த பயிற்சி தொடர்பிலான மேலதிக தகவல்களை யாழ்.பனை அபிவிருத்தி சபையில் பெற்றுக்கொள்ள முடியும்.