2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுகிறது என சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு 4058 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு 51448 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழு்ம்பில் 10261 நோயாளர்களும், கம்பாகாவில் 5836 பேரும், மட்டகளப்பில் 4843 பேரும் யாழ்ப்பாணத்தில் 4058 பேரும், கண்டியில் 3828 பேரம் களுத்துறையில் 3103 பேரும், என அதிக டெங்கு நோயாளர்கள் கொண்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன.
வடக்கில் ஏனைய மாவட்டங்களான வவுனியாவில் 597 பேரும், கிளிநொச்சியில் 342 பேரும், மன்னார் மாவட்டத்தில் 223 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களான இனம் காணப்பட்டுள்ளனர்.