ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை சதி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தர அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை முற்பகல் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்தியுள்ள தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்காகவே காவல்துறைமா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது