சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் மேற்கொண்டால்; பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் எனவும் 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2015-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவுதற்காக அமெரிக்க படையில் அங்கு சென்றிருந்தனர்.
இந்தநிலையில் தற்போது சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகளை அங்கிருந்து மீறப்பெறுவதாகவும் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்ததனையடுத்து அங்கிருந்து கடந்த மாத இறுதியில் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறி வருகிறார்கள்.
இதேவேளை தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக துருக்கி அறிவித்திருந்த நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்
எனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது