ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை, கடந்த வருடம் வெள்ளை மாளிகை கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலை தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை, ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு பென்டகனிடம் அனுமதி கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பென்டகன், ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற வெள்ளை மாளிகையின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டதா என்பதும் ஜனாதிபதி டிரம்பிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.