227
கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த பொருட்களை உடைக்கும் கடை ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு ‘ஆங்ரி ரூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கடிகாரம், தொலைபேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
பெரும் கோபத்தில் வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டு தங்கள் ஆவேசங்களை அந்தப் பொருட்களின் மீது வெளிப்படுத்தலாம். அவ்வாறு அவர்கள் பொருட்களை உடைக்கும் போது பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது.
இந்த ஆங்ரி ரூமுக்குள் நுழைந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் தூக்கியெறிந்து உடைக்க 30 நிமிடங்களுக்கு இந்திய மதிப்பில் 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக உடைகளும் கோபக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கடைக்கு 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் மன அழுத்தத்தை போக்கவே இந்தக் கடையை திறந்திருப்பதாகவும், வன்முறையை ஊக்குவிப்பது தங்களின் நோக்கமல்ல என்றும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love