சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டதுடன் சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டினை விட காற்றுமாறு குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் போகி அன்று நிலவிய சாதகமான வானிலை, வாரியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வு, போன்ற காரணங்களால் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் காற்று மாசு குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது