குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு எதிர்வரும் 07ஆம் திகதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விபத்து சிகிச்சை பிரிவில் 100 கட்டில் வசதிகளுடன் , 3 சத்திர சிகிச்சை கூடங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
விபத்துக்களுக்கு உள்ளாவோர் நேரடியாகவே இந்த பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கபட்டு , அவர்கள் குணமடைந்த பின்னர் அவர்கள் அங்கிருந்தே வெளியேற கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குறித்த சிகிச்சை பிரிவினை எதிர்வரும் 7ஆம் திகதி மத்திய சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னவினால் திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்தார்.