Home இலங்கைஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை புற்றுநோயில் இருந்து நோயாளி மீண்டார்..

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை புற்றுநோயில் இருந்து நோயாளி மீண்டார்..

by admin


ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, 56 வயதுடைய மொஹமட் நியாஸ் என்பவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

எனினும் இவருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். டிரான்ரல் எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்டோனிக் (Transoral endoscopic transonic)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார். இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More