குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் மரணமாவார் என்ற செய்தி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி மரணமாவார் என ஜோதிடர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
1987ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது அவரை தாக்கிய கடற்படை சிப்பாயும் தற்போது ஜோதிடராக கடமையாற்றி வருபவருமான விஜேமுனி விஜித ரோஹன டி சில்வா, ஜனாதிபதி அடுத்த ஆண்டு உயிரிழப்பார் என எதிர்வு கூறியுள்ளார். இது பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.