Home உலகம்ஸ்பெயினில் சாத்தானின் சிலை – கேளிக்கையாக தோன்றுவது, விமர்சனத்திற்கு உள்ளாகியது…

ஸ்பெயினில் சாத்தானின் சிலை – கேளிக்கையாக தோன்றுவது, விமர்சனத்திற்கு உள்ளாகியது…

by admin

ஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நகரத்தின் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் ஏமாற்றி புகுந்துவிட்டதாக தெரிவிக்கும் உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த வெண்கல சிலை உருவாக்கப்பட்டது.

எனினும் புன்னகை பூத்துக்கொண்டு, கைத்தொலைபேசியை பயன்படுத்தி செல்பி எடுத்துக்கொள்ளும் இந்த சாத்தான் சிலை மிகவும் நட்பார்ந்த ரீதியில் தோன்றுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்த கலைப்படைப்பை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

இந்தநிலையில் தன்னுடைய கலை வேலைபாட்டுக்கு வந்துள்ள விமர்சனங்களால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More