Home இலங்கை“பொலிஸ் அதிகாரம்” என்பது தமது மொழியில் முறைப்பாட்டை பதிவு செய்வதே என்கிறார் தம்மிக்க பெரேரா…

“பொலிஸ் அதிகாரம்” என்பது தமது மொழியில் முறைப்பாட்டை பதிவு செய்வதே என்கிறார் தம்மிக்க பெரேரா…

by admin


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டின் முன்னணி வர்த்தகர்களிடம் நாட்டுக்கு சேவையை பெற்றுக் கொண்டதாகவும், அதேபோன்று தற்போதைய தலைவர்களும் நாட்டின் எதிர்கால பயணத்திற்காக முன்னணி வர்த்தகர்களிடம் ஒத்துழைப்பு பெற வேண்டும் என பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா கூறியுள்ளார் கொழும்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தேவையென்றால் நிதியமைச்சின் செயலாளர் பதவியையும் ஏற்றுக் கொள்ள தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் வடக்கு மாகாணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,  “மக்களுக்கு விளங்குகின்ற காவற்துறை அதிகாரம் என்ன? தமது முறைப்பாடொன்றை பதிவு செய்ய சென்றால் தமது மொழியில் உடனடியாக அதனை செய்துகொள்ள முடியுமா என்பதே.  வடக்கு மாகாணம் முழுவதற்கும் 56 காவல் நிலையங்களே இருக்கின்றன. ஆகவே ஒரு காவல் நிலையத்திற்கு 10 அதிகாரிகள் என்ற ரீதியில் 560 பேரை நியமித்தால், அந்த ஒவ்வொரு நிலையங்களுக்கும் 05 மோட்டார் சைக்கிள்கள் வீதம் 280 மோட்டார் சைக்கிள்கள் வழங்க வேண்டியிருக்கும் இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன.  ஆகவே இதுபோன்று மோட்டார்சைக்கிள்களை வழங்கி காவற்துறை அதிகாரிகள் சிலரை வழங்க வேண்டும். மக்கள் காவல் நிலையத்திற்கு வரும் வரையில் ஏன் காத்திருக்க வேண்டும்? மக்கள் தொலைபேசியில் அழைத்தால் ஏன் வீட்டிற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது?  உண்மையில் வடக்கில் 11 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 240,000 பிள்ளைகள் பாடசாலை செல்கிறார்கள். இந்த 240,000 இல் நூற்றுக்கு 30, 40 வீதமானவர்கள் காலையில் சாப்பிடாமல் செல்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More