Home உலகம்கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்

கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்

by admin


பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா என மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தற்போது இளவர்சர் பிலிப் நலமாக இருக்கிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More