Home இந்தியாதமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை :

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை :

by admin


தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள், முறைகேடான வகையில் பணத்தை புதிய தாள்களாக  மாற்றுவதாக எழுந்த முறைப்பாடுகளை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி  வருகின்றனர்.

அண்மையில்; சென்னையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், 100 கோடி ரூபாக்கும்  அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறதென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More