155
மகிந்த ராஜபக்ச எதிர்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்றே தாம் விரும்புவதாகவும் அதனை தெரிவித்து வாழ்த்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசாங்கம் என்பது உடையும் பல்லின் நிலைமையில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடிந்தபோதும் தற்போது, அரசாங்கத்துக்கு வந்த பின்னர் அதனை நிரூபிக்க முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நிலமை நீடித்தால், 2015 ஆம் ஆண்டில் 47 உறுப்பினர்களுடன் பிரதமராக இருந்ததைப்போன்றே தொடர்ந்தும் இருப்பார் .எனவே, இன்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச இந்த பதவியில் நீடித்து இருக்கக்கூடாது என்றே தாம் வாழ்த்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love