Home சினிமாவிஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர்

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர்

by admin


சேதுபதி திரைப்படத்தை இயக்கியுள்ள அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு சிந்துபாத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் , விஜய் சேதுபதியின் 26ஆவது திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக ஜோடியாக அஞ்சலி நடிக்கின்றார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை ஆற்றுகிறார். அருண்குமார் – விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் வை.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் முதல் புகைப்படம் மற்றும் சுவரொட்டி  விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More