மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்முள்ளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலையில் ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் தமது பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததால் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதனால் அங்கு மக்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது