Home இலங்கைநாளை சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது

நாளை சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது

by admin


முல்லைத்தீவிற்கு நாளை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இதன்போது படையினர் வசமுள்ள சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி படைத்தரப்பினருக்கு வழங்கிய பணிப்புரைக்கமையவே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், மற்றும் அரச காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் போதைப்பொருள்தடுப்பு வாரம் ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More