விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கிற வகையில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
டிசம்பர் மாத மொத்த விலை குறியீட்டு எண் விவரங்களை மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் அண்pமையில் வெளியிட்ட அறிக்கையில் முதன்மை உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்ததால், விவசாயிகளின் வருமானம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகளின் நலன்களை பேணுகிற வகையில் அவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, 1 ரூபாயில் பயிர்க்காப்பீடு, விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின்னரான இழப்புகளை ஈடுகட்டுகிற வகையில் ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபா வழங்குதல் உள்ளிட்டவை பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் திகதி அறிவிப்பதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கூட்டணி அரசு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.