நீதியை நிலைநாட்டுமாறு கோரி ஊடக அமைப்புகள் இலங்கை காவல்துறை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு முன்வைக்க தீர்மானித்துள்ளன. ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக செயற்படுவதை கண்டித்தே இவ்வாறு ஊடக அமைப்புகள் முறைப்பாடை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு காவல்துறை ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாட்டினை அவர்கள் முன்வைக்கவுள்ளனர்.
மேலும் அன்றயைதினம் காலை 10.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள கிளை அலுவலகத்தில் இது தொடர்பில் இரைணயம் மூலம் கையொப்பம் திரட்டப்பட்ட மனுவொன்றும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது