Home இலங்கைநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…

நெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…

by admin

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியில் அருகில் நின்ற பனை மரத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 6 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வாகனங்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More