Home இலங்கைகச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா – சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா – சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் 16 ஆம் திகதி மார்ச் மாதம் நடாத்துவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால நிலைமைகள் பற்றிய உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட செயலளர் நாகலிங்கம் வேதநாயகன் தலமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக செயலளர் சுகுணரதி தெய்வேந்திரம், மற்றும் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச அருட் சகோதரர் எ.எமி போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முறை கடந்த வருடங்களை போல் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இம்முறை இந்தியாவில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களுகள் இளைப்பாறுவதற்கு நிழல் கூடராங்கள் 70, மற்றும் குடிநீர் தாங்கிகள் 150, மலசகூட வசதிகள் என்பன கடற்படையினர், மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடியவகையில் இதர செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துக்கள் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் படகு சேவைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது

அதேபோல கடந்த வருடங்களை போல் இவ்வருடமும் அனைத்து ஒழுங்கமைப்பு முழுமையான காணப்படும் என மாவட்ட செயலளர் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More