போர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வரிஏய்ப்பு செய்தமைக்காக 16.7 மில்லியன் பவுண்டுகள் அபராதமும் 23 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மட்ரிட் கழக அணிக்காக விளையாடியுள்ள நிலையில் அக்கால கட்டத்தில் ரொனால்டோ வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தமை கண்டுபிடிக்கப்பட் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ரொனால்டோ ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்றையதினம் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
எனினும் ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதனால் ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது