Home இலங்கைநாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு

நாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதுவிலிருந்து விடுதலை பெற்ற நாடு எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள் வழிப்புணர்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சாவகச்சேரி காவல்துறையினரால் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் பவளகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தென்மராட்சி உதவிப் காவல்துறை அத்தியட்சகர் தசாநாயக்க சாவகச்சேரி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார உப காவல்துறை பரிசோதகர் இ.சேந்தன் ஆகியோர் மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் சாவகச்சேரி காவல்துறைநிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் நெறியாள்கை செய்த போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது. இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More