181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம் விடுதலை செய்தது.
தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன் பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக படகு சேதமடைந்த நிலையில் ஆறு மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஆறு மீனவர்களும் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆறு மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
Spread the love