அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒருமுறையேனும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று மாதங்கள் கடந்தும் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இதுதொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27/2 விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே, அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.