https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2287103374860484/
திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திந்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.
சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தல்….
Jan 25, 2019 @ 05:19
திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி எதிர்வரும் நாளை சனிக்கிழமை யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் நாளை 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம்,தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திந்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
ஊடகப்படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்க ஊடக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.