பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயற்பட்டதற்காக, தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொண்டடப்பட்ட தேசிய பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நேற்றையதினம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வழங்கிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.