இலங்கை அரச படைகள், இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் எவற்றிலும் ஈடுபடவில்லை என்பதை தகுந்த சான்றுகள் மூலம் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என உலக தேசப்பற்றாளர் இலங்கையர் மன்றம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அத்துடன், திடமான சான்றுகளை முன்வைத்து, சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நீக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுகின்றபோது, இதனை மேற்கொள்ளுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக வேண்டும் என அவ் அமைப்பின் பொரளை, என்.எம். பெரேரா கிளையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் பிளவுகள் ஏற்படாத ஆட்சி நிலை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.