மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையினர் மீது இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் இலங்கை இராணுவத்தினர் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் கொல்லப்பட்டவர்களின் ஒருவர் இராணுவ கப்டன் தரத்தை சேர்ந்தவர்; எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலியின், டௌன்ட்ஜா என்ற பகுதியில் ஐ.நா படையில் இடம்பெற்றுள்ள இலங்கை இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர்களது வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் கப்டன் தர இராணுவ அதிகாரி ஒருவரும், மற்றுமொரு இராணுவ சிப்பாயும் உயிரிழந்துள்ளதை இலங்கை இராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. காயமடைந்த இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.