பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றையதினம் செஞ்சூரியனில் நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 33 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழையின் குறுக்கீட காரணமாக போட்டியினை முடித்துக்கொள்ள நடுவர்கள் முடிவு செய்தனர். இந்தநிலையில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்ரிக்க அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.