Home உலகம்வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம்

வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம்

by admin


வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், முகப்புத்தக  மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.

இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் முகப்புது;தக நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More