Home இலங்கைமன்னார் சௌத்பாரில், வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு…..

மன்னார் சௌத்பாரில், வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு…..

by admin

மன்னார்-சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் காவற்துறையினர்  இன்று சனிக்கிழமை காலை (26.01.19) மீட்டுள்ளனர்.

ச டலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொவயோதிபர் ண்ட 82 வயதுடைய  கதிர்காமநாதன் அருளானந்தன் எனது அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் நேற்று வெள்ளிக்கிழமை (25.01.19) இரவு வீட்டில் இருந்து சென்ற நிலையிலே இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் காவற்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை மீட்டுள்ளனர். இந்த  வயோதிபரின் மரணம் தொடர்பில் காவற்துறையினர்  மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More